அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்த நிலையில், இருவருக்கும் கரோனா உறுதியானது.
இதையடுத்து, இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், ட்ரம்ப்பின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது உடல்நிலையும், தனது மனைவியின் உடல்நிலையும் சீராக இருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் விரைவில் குணமாக வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய உடல்நிலையே எப்படி உள்ளது என்று தெரியாமல் உள்ள நிலையில், அவர் அமெரிக்க அதிபருக்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.