Skip to main content

நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா எதிர்ப்பு!!!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020



 

Nepal graph issue

 

இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. நேபாளத்தின் இந்த செயல் ஒருதலைபட்சமானது என இந்திய வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைத்தது அல்ல என்றும், எல்லைப் பிரச்னைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முரணாக நேபாளத்தின் செயல் உள்ளது என்றும் இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.   
 

சார்ந்த செய்திகள்