25 வயது பெண் ஒருவரின் கொடூரமான கொலை மற்றும் அவரது சிதைந்த உடலின் படங்கள் மெக்ஸிகோவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான இங்க்ரிட் எஸ்கமில்லா மெக்ஸிகோவில் தனது கணவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ(46) என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வார இறுதியில் அந்த பெண் காணாமல் போனதாக போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த பெண் கொல்லப்பட்டது தெரியவந்தது. அந்த பெண்ணின் வீட்டில் அவரது உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து அந்த பெண்ணின் கணவனை விசாரித்த போலீசார், அவரே தனது மனைவியை கொலை செய்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
திருமணமானது முதல் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகவும், அப்படி ஒரு வாக்குவாதத்தில் போது தனது மனைவியை கத்தியால் கழுத்தில் குத்தி கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க உடலில் உள்ள தோல்பகுதிகளை உரித்தெடுத்து, உடலை துண்டுகளாக்கி சாக்கடையிலும் வீசியுள்ளார்.
இந்த குற்றத்திற்காக அப்பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில், இறந்த பெண்ணின் சேதப்படுத்தப்பட்ட உடல் பாகங்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதால், அந்நாட்டில் இந்த விவகாரம் பூதகரமாகியுள்ளது. மேலும், அந்த பெண்ணின் கொலைக்கு நீதி வேண்டி மெக்ஸிகோ முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.