Skip to main content

மாலத்தீவு தீ விபத்து; குமரியைச் சேர்ந்த தம்பதி உட்பட 11 பேர் உயிரிழப்பு

Published on 10/11/2022 | Edited on 17/11/2022

 

Maldives fire; 11 people including a couple from Kumari lost their lives

 

மாலத்தீவு தலைநகர் மாலேவில் நேற்று இரவு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாகனம் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அந்தக் கட்டிடம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

8 இந்தியர்களில் 3 பேர் தமிழர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த தம்பதி ஜெனிஸ், சுந்தரி ஆகியோரும் இந்த தீ விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அவர்களின் குடும்பத்திற்குக் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

 

இந்நிலையில் விபத்தில் இறந்தவர்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “மாலத்தீவில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்களைச் சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

Deeply pained to hear about the fire accident and loss of lives in Maldives. We are in touch with the Indian mission to coordinate the efforts to bring back the mortal remains of the deceased to Tamil Nadu.

— M.K.Stalin (@mkstalin) November 10, 2022

 

 

சார்ந்த செய்திகள்