ஜப்பான் நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த ஒரு வருட காலமாக அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அம்மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தவர்களை விட அதிகம்.
தனிமையாக உணருபவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதால், தங்கள் நாட்டு குடிமக்களின் தனிமையைப் போக்குவதற்காக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை தனிமை அமைச்சராக நியமித்துள்ளார். தனிமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இவர், குடிமக்களின் தனிமையையும், சமூகத்தில் தனித்திருக்கும் நிலையையும் குறைக்க நடவடிக்கை எடுப்பார். டெட்சுஷி சாகாமோட்டோ, ஏற்கனவே ஜப்பானில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிமையைப் போக்குவதற்கான அமைச்சரை ஏற்கனவே இங்கிலாந்து நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தனிமையைப் போக்குவதற்கான அமைச்சரை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.