Skip to main content

ஆற்றில் படகு கவிழ்ந்து 100 க்கும் மேற்பட்டோர் பலி..

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

ஈராக் நாட்டின் மொசூல் நகரில் குர்திஷ் இன மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக டைகரிஸ் ஆற்றை கடந்து மறுபுறம் சென்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக 160-க்கும் மேற்பட்டோர் பெரிய படகு ஒன்றில் டைகரிஸ் ஆற்றை கடந்துள்ளனர்.

 

iraq boat accident

 

அப்போது ஆற்றில் தண்ணீர் அதிக வேகத்தில் ஓடிய நிலையில், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால், படகு திடீரென ஆற்றில் தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். ஆற்றின் நீரின் வேகம் அதிகமாக இருந்தால் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து மீட்பு படகுகள் செல்வதற்குள் 61 பெண்கள், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் என 100 பேர் உயிரிழந்தனர். 55 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற இந்த சம்பவம் அந்த நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஈராக் பிரதமர் அதில் அப்துல் மெஹதி இரங்கல் தெரிவித்து, நாடு முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து ஆராய்ந்து காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்