Gang incident of girl by 9 persons; Shocking Udumalaipet incident

திருப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி ஒருவர் ஆளான சம்பவத்தில் மேலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்திருப்பதுஅதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்று சிறுவர்களின் மீது பதிவானது. அதில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதும் அதன் மூலம் அச்சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் மூன்று பேர் 14, 15, 16 என வயதுகளை கொண்ட சிறுவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

இந்தநிலையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுவர்கள் உள்ளிட்ட அந்த நபர்கள் மேலும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரிக்கப்பட்டதில் மற்றொரு சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் உடுமலைப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தச் சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.