உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,166 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,348, அமெரிக்காவில் 6,070, பிரான்சில் 5,387 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் 204 நாடுகளில் 10,14,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1,15,242, ஸ்பெயின் 1,12,065, ஜெர்மனி 84,794,சீனாவில் 81,589, பிரான்ஸில் 59,105, ஈரான் 50,468, பிரிட்டன் 33,718, பாகிஸ்தான் 2,421, இலங்கையில் 151 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 2,12,018 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,965 லிருந்து 2,069 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 50 லிருந்து 53 ஆக அதிகரித்துள்ளது.மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 151 லிருந்து 156 ஆனது.
கரோனாவால் 2,44,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகளவில் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு செய்யப்பட்ட இரண்டாம் கட்டப் பரிசோதனையிலும் கரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஒருவருக்குக் கரோனா இல்லை என்பதை உறுதி செய்ய இரண்டு சோதனைகளில் நெகட்டிவ் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.