பல வெளிநாட்டு பெரு நிறுவங்களின் தலைவர் பதவிகளில் இந்தியர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான ஃபெட் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியன் பணியமர்த்தப்பட்டுள்ளார். உலகின் மிக பெரிய தளவாடங்கள் பரிமாற்ற நிறுவனமான இதில் கடந்த 27 ஆண்டுகளாக பணியாற்றிய இவருக்கு தற்பொழுது இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இவர் மும்பை ஐ.ஐ.டி யில் பட்டப்படிப்பு முடித்தவர். படிப்பை முடித்து, இந்த நிறுவனத்தில் சேர்ந்த இவர் முதலில் ஹாங்காங் மற்றும் கனடா நாடுகளில் சந்தைப்படுத்துதலில் பணியாற்றினார். பின்னர் கடந்த ஆண்டு கனடா நாட்டின் மார்க்கெட்டிங் பிரிவிற்கான துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்பொழுது ஒட்டுமொத்த நிறுவனத்திற்குமான தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.