தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள ஆண்டஸ் மலைகளில் அமைந்துள்ள அகோன்காகுவா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரத்து 962 மீட்டர் (22841.21 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. எண்ணத்தால் கூட எட்ட முடியாத இந்த சிகரத்தின் உச்சியை ஆந்திராவைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்ற 12 வயது சிறுமி எட்டிப்படித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தற்போது, மும்பையில் உள்ள கப்பற்படை குழந்தைகள் பள்ளியில் படித்து வருகிறார். இவர் முதலில் அகோன்காகுவா சிகரத்தில் ஏற முயற்ச்சித்த போது 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் இவருக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார். சிறுவயதில் இருந்தே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட காம்யா கார்த்திகேயன், பெற்றோரின் உதவியுடன் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள கொசியோஸ்கோ உள்ளிட்ட சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.