குய் என்பவர் இருபது ஆண்டுகளாய் பயன்படுத்திய காரின் மீது தீராக் காதால் ஏற்பட்டுள்ளதால், அவர் இறந்த பின்னர் அந்த காரையும் உடன் வைத்து புதைத்துள்ளனர்.
சீனாவில் ஹெபேய் என்ற மாகாணத்தில் குய் என்று ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு சிறு வயதிலிருந்தே கார்கள் என்றால் அதிகம் பிடிக்குமாம். ஆகையால், அவர் பயன்படுத்தி வந்த காரின் மீதும் அதிக பாசம் நேசம் எல்லாம் வைத்துள்ளார்.
குய் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உடல்நல கோளாறால் இறந்துள்ளார். அவர் அதற்கு முன்பே தன் குடும்பத்தார்களிடம் நான் இறந்தாலும், என் காருடனையே என்னை புதைத்துவிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தாராம். அதன்படி, அவரின் சடலத்தை காரில் வைத்து புல்டோஸரின் மூலம் பெரிய பள்ளம் நோண்டப்பட்டு, காரை பெரிய கொக்கி கொண்ட கிரேன் மூலம் உள்ளே புதைத்துள்ளனர். இதை விடியோ எடுத்து டிவிட்டரில் பதிவிட. தற்போது உலகம்முழுவதும் பரவலாக பேசப்பட்டும், கலாய்க்கப்பட்டும் வருகிறது.