அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நாட்டு மீது பொருளாதார தடை விதித்துள்ளார் . ஈரானுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா ஈரான் நாட்டு மீது பொருளாதார தடை விதித்துள்ளது . இந்தியா , தென் கொரியா , தைவான் , சீனா , ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றனர் .இந்நிலையில் இந்திய அரசு ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது . இதனால் அமெரிக்கா டாலரில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மே 4 வரை கெடு விடுக்கப்பட்டிருந்தது .
அப்படி இல்லையென்றல் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது . இருப்பினும் ஈரான் அரசு இந்தியாவிற்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது .இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈரான் அரசிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதிக் கூறி அமெரிக்கா அரசிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .எனவே அமெரிக்கா அரசு ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தால் இந்தியாவுடன் ஈரான் , அமெரிக்கா நல்லுவுறவு மேலும் வலுப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .