உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43.39 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,08,636 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினியில் 2,69,520, ரஷ்யாவில் 2,32,243, பிரிட்டனில் 2,26,463, இத்தாலியில் 2,21,216, பிரான்சில் 1,78,225, பிரேசில் 1,77,602, ஜெர்மனியில் 1,73,171, துருக்கியில் 1,41,475, ஈரானில் 1,10,767, சீனாவில் 82,926, பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,425 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஸ்பெயினியில் 26,920, ரஷ்யாவில் 2,116, பிரிட்டனில் 32,692, இத்தாலியில் 30,911, பிரான்சில் 26,991, பிரேசிலில் 12,404, ஜெர்மனியில் 7,738, துருக்கியில் 3,894, ஈரானில் 6,733, சீனாவில் 4,633 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.