/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_45.jpg)
உலகையே அச்சுறுத்திலட்சக்கணக்கான உயிர்ப் பலிகளை வாங்கிய கரோனாவைரஸைஎளிதில் யாராலும் மறக்க முடியாது. உலகில் முதல் முறையாகசீனாவின்வுகான் நகரில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த கரோனாவைரஸ், 2020 ஆம் ஆண்டின்தொடக்கத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கும்பரவிஏராளமான மரணங்கள், ஊரடங்கு, பொருளாதார முடக்கம் எனப் பல இன்னல்களுக்குஉள்ளாக்கியது. அதன் பிறகு முகக்கவசம், தடுப்பூசி எனப் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றிபடிப்படியாகக் கரோனாதொற்று குறைந்துஉலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சீனாவில் கட்டுக்குள் இருந்தகரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதனால், சீனாவில் உள்ள பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்துவந்த கரோனாபாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிப்பதால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)