உலகில் பெரும்பாலான மக்கள் டீ பிரியர்களாக இருக்கிறார்கள். டீ குடித்தால்தான் என்னால் வேலை செய்ய முடியும். அப்போதுதான் நான் புத்துணர்ச்சி அடைவேன் என்கிற பேச்செல்லாம் டீ பிரியர்கள் வாயிலாக நம் காதுகளில் விழுந்திருக்கும்.
டீ பிரியர்களே ஒரு டீக்கு இவ்வளவு செலவிட வேண்டுமா என்று ஆச்சரியத்தில் வாய் பிழக்கும் அளவிற்கு லண்டனில் ஒரு உணவகம் டீ கொடுக்கிறது. அந்த டீ யின் விலை எவ்வளவு தெரியுமா ரூ.13,800. லண்டனிலுள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ள ரூபென்ஸ் உணவகத்தில்தான் அந்த டீ இவ்வளவு காஸ்ட்லியாக விற்கப்படுகிறது.
சாதாரண டீ தூளை பயன்படுத்தி இங்கு டீ போடுவதில்லையாம், அதற்கு பதிலாக இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் டிப்ஸ்’ எனும் பிரத்யேக தேயிலையை வெல்வெட் துணியில் காய வைத்த பின்னரே, டீ போடப்படுகிறது. இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த டீ தரும் சுவைக்காக இந்த டீயை பலரும் சுவைத்து வருகிறார்களாம்.