உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் 3,17,64,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,33,71,783 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,74,582 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில்- 70,97,879, பிரேசிலில்- 45,95,335, ரஷ்யாவில்- 11,15,810, பெருவில்- 7,72,896, தென் ஆப்பிரிக்காவில்- 6,63,282, கொலம்பியாவில்- 7,77,537, மெக்ஸிகோவில்- 7,00,580, சிலியில்- 4,48,523, ஸ்பெயினில்- 6,82,267, ஈரானில்- 4,29,193 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில்- 2,05,471, பிரேசிலில்- 1,38,159, கொலம்பியாவில்- 24,570, மெக்ஸிகோவில்- 73,697, இத்தாலியில்- 35,738, பிரான்ஸில்- 31,416, ஈரானில்- 24,656, ஸ்பெயினில்- 30,904, ரஷ்யாவில்-19,489, சிலியில்- 12,321, பிரிட்டனில்- 41,825 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.