சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குக் கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், துணைத் தலைவர் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் மன்றத்தில் சார்பில் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உணவு விடுதி என்ற பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த விடுதியில் உயர்தர சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உணவு விடுதியை சென்னை மாநகர ஆணையர் அருண் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உடன் இருந்தனர்.