Skip to main content

விண்வெளியில் இருந்து அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ள வீராங்கனை...

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Kate Rubins to vote from space in usa president election

 

நாசா விண்வெளி வீராங்கனையான கேட் ரூபின்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

நாசா விண்வெளி வீராங்கனையான கேட் ரூபின்ஸ் வரும் அக்டோபர் மாத மத்தியில் விண்வெளிக்குச் செல்வதற்காக தற்போது ரஷ்யாவில் தங்கி பயிற்சிபெற்று வருகிறார். அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்லும் ரூபின்ஸ் ஆறு மாதங்கள் அங்கு தங்கி ஆய்வு நடத்த உள்ளார். இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் விண்வெளியிலிருந்து வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளார் கேட் ரூபின்ஸ். தன்னால் விண்ணிலிருந்தாலும் வாக்களிக்க முடியும் என்பதால், மண்ணில் இருப்பவர்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரூபின்ஸ், ஜனநாயகத்தில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார். பெரும்பாலான அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஹூஸ்டனில் வசிப்பதால், பாதுகாப்பான மின்னணு வாக்குச்சீட்டை விண்வெளியிலிருந்து பயன்படுத்தி வாக்களிக்க டெக்ஸாஸ் சட்டம் அனுமதிக்கிறது. மிஷன் கன்ட்ரோல், வாக்குச்சீட்டை விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதோடு, வாக்குச்சீட்டை மீண்டும் கவுண்டி அதிகாரிகளிடம் கொண்டுசேர்க்கும். 

 

 

சார்ந்த செய்திகள்