உலகின் முதல் தண்டவாளமற்ற ரயில்சேவை சீனாவில் தொடங்கியது!
தண்டவாளங்கள் இல்லாமல் பயணிக்கும் ரயில்சேவை இன்றுமுதல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.
இருப்புப்பாதைகள் உள்ள ரயில் தொடங்கி, நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தாக்கத்தால் பலவிதமான ரயில்கள் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன. ஆனால், எல்லா ரயில்களுமே தண்டவாளங்களைச் சார்ந்தே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சீனாவில் சூசோவு பகுதியில் தண்டவாளங்கள் இல்லாத ரயில்சேவை இன்று தொடங்கியது. இந்த ரயில்கள் தண்டவாளங்களுக்கு பதிலாக, சாதாரண சாலையில் உள்ள வெள்ளைக் கோடுகளை சென்சார்கள் மூலம் பின்பற்றி இயங்கும். இந்த ரயில்கள் மின்சக்தியின் உதவியுடன் செயல்படும். ஒரே சமயத்தில் 300 பயணிகளை ஏற்றிச்செல்லும் இந்த ரயில், மணிக்கு 70கிமீ வேகத்தில் செல்லுமாம்.