வங்கதேச மருத்துவர்கள் குறிப்பிட்ட ஒரு மருந்து கலவையைக் கொண்டு கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்ததில், நோயாளிகள் நான்கு நாட்களில் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 100 மருந்துகள் இதுவரை சோதனை கட்டத்திற்கு வந்துள்ளன. ஆனால் கரோனாவைக் குணப்படுத்தக்கூடிய மருந்து என இன்றுவரை அதிகாரபூர்வமாக எந்த மருந்தும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் வங்கதேசத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட ஒரு மருந்து கலவையைக் கொண்டு கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்ததில், நோயாளிகள் நான்கு நாட்களில் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் தலைமையிலான குழு கரோனா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. அந்தக் குழுவினர் மெக்டின் மற்றும் டாக்ஸி-சைக்ளின் ஆகிய மருந்துகளைக் கலந்து கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்துள்ளனர். 60 பேரிடம் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் முடிவில் 4 ஆம் நாளிலேயே 60 பேரும் வெற்றிகரமாக கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு முதல் 3 நாட்களில் சுவாசப் பிரச்சினை சீரடைந்தும், 4 ஆம் நாளில் கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன.மேலும், இந்த மருந்து கலவையால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், இதற்கான சர்வதேச அங்கீகாரத்திற்காக அக்குழு விண்ணப்பித்துள்ளது.