Skip to main content

அமெரிக்கா்கள் நாளை கூடுதலாக ஒரு மணிநேரம் தூங்கலாம்!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
SLEEP

 

குளிர் காலத்திலும் வெயில் காலத்திலும் சூரியன் லேட்டாகத்தான் மறைகிறது. சூரிய வெளிச்சத்தை கூடுதலாகப் பெறுவதற்கு வசதியாக கடிகாரங்களில் ஒருமணி நேரத்தை முன்தள்ளி வைப்பது அமெரிக்காவில் வாடிக்கை.

 

பிரபல விஞ்ஞானியான பெஞ்சமின் பிராங்க்ளின் இதை முதன்முதலில் பரிந்துரைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி கோடைக்காலம் தொடங்கும்போது கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்தள்ளி வைப்பது அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கிறது.

 

இந்தப் பழக்கத்தை 1916 ஆம் ஆண்டு ஜெர்மனிதான் முதன்முதலில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 1918 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும் கடைப்பிடிக்கத் தொடங்கியது. மார்ச் மாதம் 10 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதிவரை இந்த பகல் நேர வெளிச்ச சேமிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது நாளை காலை அமெரிக்கர்கள் ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கலாம். அதாவது, நாளை அதிகாலையில் அமெரிக்கர்களின் கடிகாரம் 4 மணி காட்டினால், அதை 1 மணி நேரம் பின்னுக்குத் தள்ளி 3 ஆக்கிவிட்டு மேலும் ஒரு மணிநேரம் தூங்கலாம்.

 

கூடுதல் நேரம் வெயில் நம்மீது படும்போது அதற்கு தகுந்தபடி நமது ஆற்றல் பெருகும் என்பது பெஞ்சமின் பிராங்க்ளினின் கருத்து. ஆனால், இந்த பழக்கத்தை அமெரிக்காவின் அரிசோனா, ஹவாய் ஆகிய இரு மாநிலங்களும் கடைப்பிடிப்பதில்லை. பொதுவாகவே இந்தப் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அமல்படுத்தப்படுவதில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்தப் பழக்கத்தினால் ஆற்றல் அதிகரிக்கிறது, வெளிச்சம் சேமிக்கப்படுகிறது என்ற கருத்து உண்மையா என்று இதுவரை நடத்திய ஆய்வுகள் எதிலும் நிரூபிக்கப்படவில்லை என்பதே எதார்த்தமான நிஜம்.

 

 

 

சார்ந்த செய்திகள்