Published on 15/10/2020 | Edited on 15/10/2020
ஜெர்மனியைச் சேர்ந்த ஆலிவர் என்பவர் விளைவித்த பூசணியானது, ஐரோப்பாவின் அதிக எடையுள்ள பூசணிக்காயாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ராட்சத காய்கறி வளர்ப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள லுட்விக்ஸ் பர்க்கில், பூசணிக்காய்த் திருவிழா நடைபெற்றது. வழக்கமாக இவ்விழாவில் பல நாடுகள் பங்கெடுப்பது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா மட்டுமே பங்கெடுத்தன. இதில், ஜெர்மனியைச் சேர்ந்த ஆலிவர் லாங்ஹெய்ம் என்பவர் விளைவித்த 745 கிலோ பூசணியானது, ஐரோப்பாவின் அதிக எடையுள்ள பூசணியாகத் தேர்வு செய்யப்பட்டது.
விழாவின் முடிவில் பேசிய ஆலிவர் லாங்ஹெய்ம், இந்தப் பூசணிக்காயானது 90 நாட்களில் விளைந்தது எனவும், இதற்காக தினமும் 600 லிட்டர் தண்ணீர் செலவழித்ததாகவும் கூறினார்.