சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர், வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தார். 2015 ஜூன் 23ம் தேதி திருச்செங்கோட்டில் உள்ள மலைகோட்டைக்கு அந்தப் பெண்ணுடன் அவர் சென்றார். அப்போது, அவரை சிலர் கடத்தி சென்றனர். இதன்பின்னர், அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கோகுல்ராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு போலீசார், தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட சிலரை கைது செய்தனர். பின்னர், யுவராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நாமக்கல் கலெக்டர், கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டார். அதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் யவராஜ் நீதிமன்றத்தில் இங்கு இருப்பது என் உயிருக்கு ஆபத்து, இங்கு சரியான பாதுகாப்பு இல்லை என்றும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் யுவராஜை திருச்சி சிறைக்கு மாற்ற சொல்லி உத்தரவிட்டார். இதையடுத்து, யுவராஜ் போலிஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உயர் பாதுகாப்பு பிரிவு 2ல் அடைக்கப்பட்டுள்ளார்.