Skip to main content

கீழ் வீட்டு சிறுமியிடம் அத்துமீறல்! வாலிபர் போக்சோவில் கைது! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Youth arrested under pocso act

 

திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (25). இவர், சமோசா செய்து அருகில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரம் செய்துவருகிறார். இவரது கீழ் வீட்டில் இருக்கும் குடும்பத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இருந்துவருகிறார். இவர், மோகனின் மனைவியுடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார். அதன் காரணமாக அம்மாணவி அடிக்கடி மோகனின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். 

 

சமீபத்தில் அம்மாணவியின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதில் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவள்ளி வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினார். இதில், மோகனின் மனைவியைப் பார்க்கவரும் மாணவியிடம் மோகன் அத்துமீறியிருப்பதாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி; லால்குடியில் பரபரப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A rowdy who was shooted; There is excitement in Lalgudi

பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள ஆதிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா. அந்தப் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த கலைப்புலி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்தப் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்தார். கலைப்புலி ராஜா போலவே நவீன்குமார் என்பவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.

கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகிய இருவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியால் அடிக்கடி மோதல் எழுதுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவைத் தேடி வந்தனர்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சிறுகனூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கலைபுலி ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்பொழுது பதிலுக்கு ரவுடி கலைப்புலி ராஜா போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் தற்காத்துக் கொள்வதற்காக காலில் சுட்டதில் பலத்த காயமடைந்த ராஜா கீழே விழுந்தார். உடனே அவரைப் பிடித்த போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

11 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டையில் கொடூரம்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
11-year-old girl confined at home; Atrocity in pattukottai

தஞ்சாவூரில்  11 வயது சிறுமி  வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாரதி, மதியழகன் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்தும் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சரளா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.