Skip to main content

நான் உங்களின் முகம் கண்டு உங்களிடம் கற்றுக் கொள்ள வந்தேன் - கமல்ஹாசன்

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

நான் உங்களின் முகம் கண்டு உங்களிடம் கற்றுக் கொள்ள வந்தேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 

ஆர்ப்பாட்டமில்லை. ஆர்ப்பரிக்கும் கோஷங்கள் கிடையாது. அளவான தொண்டர்களோடு கணக்கைத் தாண்டுகிற கார்களின் வரிசையின்றி தென் மாவட்டத்தில் பவனி வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்.

மக்களிடம் போ. மக்களோடு மக்களாகப் பழகு. அவர்களின் மொழியை அறிந்து கொள். அவர்களின் வலிகளை உணருவாய். அவர்களுக்காகப் போராடு. அப்போதுதான் ஜெயிப்பாய் என்ற அண்ணாவின் அடிப்படை சித்தாந்தத்தை மனதில் கொண்டு, கட்சியையும் கொள்கையையும் அறிவித்துவிட்டு மக்களுடனான பயணத்திற்காக தென்மாவட்டம் வந்த கமல், மே 16ம் தேதி குமரி மாவட்டத்தை முடித்துவிட்டு மறுநாள் நெல்லை, தூத்துக்குடிப் பகுதிக்கு வந்தார். அவரின் பயணங்கள் நகரங்களை பெரும்பாலும் தவிர்த்துவிட்டு கிராமங்களையே மையமாக வைக்கப்பட்டிருக்கிறது.
 

மிஞ்சிப்போனால் ஒவ்வொரு பாயிண்டிலும், 5-10 நிமிடங்களுக்கு மேல் பேசுவதில்லை. காரில் நின்றபடியே மக்களின் மொழியில் பேசுகிறார். தன்னால் மக்கள் போக்குவரத்து தடைபட்டு விடக்கூடாது. அவர்கள் முகம் சுழிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிற கமல், அதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் தன் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். அவரின் அந்த அணுகுமுறையே திரளும் மக்கள் ரசிப்பதை அவரது பயணத்தில் பின் தொடர்ந்த நாம் கவனிக்க நேர்ந்தது.
 

You came to learn - Kamal Hassan

 

 

காலை 9 மணியளவில் வள்ளியூர் வந்த கமலை, திரைப்பட நடிகர் என்ற வகையில் காண்பதற்காகத் திரண்டது மக்கள் கூட்டம். உங்கள் ஊரின் பெருமையை அறிவேன் என்றவர் அரசியல்வாதிகள் பாணியில் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டினார். மீண்டும் வருவேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். இதே கெட்டப் தான் திசையன்விளையிலும். கூகுளுக்குள் புகுந்து என்சைக்ளோபீடியாவை அலசி, தான் பயணப்படுகிற ஊர்களின் தனித்தன்மையை அதிலிருந்து தேடி எடுத்து தன் ஸ்மார்ட்டில் பதிவிட்டிருக்கும் கமல், அந்த ஊர் வருகிற போது அவைகளைத் தட்டி தன் பேச்சில் வெளிப்படுத்துகிறார். மக்களோடு நெருக்கமாவதற்கு முயற்சிக்கிறார்.


 

You came to learn - Kamal Hassan


 

ஆழ்கடலைக் கொண்ட உவரி வந்த கமல், அங்கு ஷ்ர்ப்பாக ரவுண்ட் அடித்தவர், போச்சுக்கீஷியர்களின் காலத்திலிருந்தே இந்த ஊர் முக்கியமாக இருக்கிறது் நான் அறிவேன். நான் பாபநாசம் படத்தில் நடித்தபோது உங்கள் குலசாமியான சுயம்புலிங்கம் பெயர் கொண்டு நடித்ததால் எனக்கும் உவரிக்கும் நெருக்கமிருக்கு என்று அக்னி நட்சத்திர சூட்டிலும் வார்த்தைகளால் திரண்ட மக்களை குளிர்வித்த கமலைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தார்கள். அடுத்த மீனவ கிராமமான மணப்பாட்டில் அவரது கன்வாய் தாமதித்தது. தன்னைச் சூழ்ந்து கொண்ட மீனவ மக்களிடம் உரையாடிய கமலிடம், மீனவர்கள் சார்பில் சேவியர், டூவிட் தலைமையில் கோரிக்கை மனுக் கொடுத்தனர்.

 

You came to learn - Kamal Hassan

 

 

சேவியரிடம் பேசுகையில் கள்ளம்பொழியிலிருந்து கடல்வழியாக ஆலந்தலை மணப்பாடு பகுதிவரை அனல்மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைக் கொண்டு வருவதற்காக பைப் பதிக்கிறார்கள். அதனால் இரண்டு பக்கத்திலிருந்தும் மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாது. சிரமப்படும்னு சொன்னப்ப, அரசிடம் சொல்வோம் அவர்கள் கேட்கவில்லை என்றால் நாம் எல்லோரும் சேர்ந்து போராடுவோம்னு சொன்னார் கமல் என்றார்கள்.
 

கல்லுரிச்சாலை கடந்து திருச்செந்தூர் வந்த கமல், கல்லுரிக்குள் அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டம் போடக் கூடாது என்று ஜீ.ஓ போட்டுள்ளார்கள். நான் படிக்காதவன் அதனால் அங்க மீட்டிங் வரமாட்டேன். ஆனால் அந்த ஜீ.ஓவை உடைத்தெறிவோம் என்று பேசிய கமலின் கன்வாய் மதிய உணவிற்காக அங்கு ஷால்ட் அடித்தது.

 

You came to learn - Kamal Hassan


 

அரசியல்வாதிகளின் பேச்சு ஒன்று செயல் வேறாக இருக்கிறது. அவர்களிடம் ஒரிஜினாலிட்டி கிடையாது. ஆனா இவரின் அணுகுமுறை ஜென்ட்டிலாயிருக்கு. ஆன்மீகத்தையும், நாத்திகத்தையும் பேலன்ஸ் பண்ணிப் பேசுகிறார். இயல்பான அவரின் நடைமுறை பிடிச்சிருக்கு இவர் ஜெயிப்பார். இப்போது அல்ல. ஆனா உறுதியா நடக்கும். Hi Not Immediately. But Debanotley. கேஷீவலாக நாம் பேசிய அந்தப் பெட்டிக்கடைக்காரரான சந்தனகுமாரிடம் இது போன்ற கருத்தைக் கேட்க முடிந்தது. மதிய உணவு முடித்துக் கிளம்பிய கமலின் கன்வாய் முஸ்லீம் மக்களை முழுமையாகக் கொண்ட காயல்பட்டினம் பேருந்து நிலையப் பகுதியை வந்தடைந்தது. புதிதாகத் தன் கட்சியில் சேர்ந்தவர்களில் இரண்டு பேரைக் கொண்டு கட்சிக் கொடி ஏற்ற வைத்த கமல். ரமலான் நோன்பிருக்கும் முஸ்லீம் சகோதரர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களைச் சிரமப் படுத்தக் கூடாது. உங்களைக்காண நான் மீண்டும் வருவேன் என்று பேசிவிட்டுக் கிளம்பிய கமலின் பிரச்சார வாகனம் ஆறுமுகனேரிக்கு வந்தது.

 

You came to learn - Kamal Hassan

 

 

சுமாரான அளவிலேயே மக்கள் கூட்டமிருந்தது. ஊர் அளவும், கூடும் கூட்டத்தின் அளவும் முக்கியமல்ல. மனசுதான் முக்கியம். எனக்கு மனசு நிறைஞ்சுயிருக்கு. நான் உங்களின் முகம் கண்டு உங்களிடம் கற்றுக் கொள்ள வந்தேன். மீண்டும் உங்களைக் காண வருவேன் என்று மாறுபட்ட கோணத்தில், மக்களைத் தன் பக்கம் ஈர்க்கிற விதமாக வழிநெடுகிலும் அவரது பேச்சிருந்தது. அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை.

கமலின் இந்த மக்கள் அணுகுமுறை அரசியல், அவரை Winking point வரை கொண்டு செல்வதற்கு அவர் காத்திருக்க வேண்டிய கட்டாயம்.
 

சார்ந்த செய்திகள்