Published on 24/01/2019 | Edited on 24/01/2019

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் 3.43 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. குறிப்பாக பெரு நிறுவனங்களில் மட்டும் ரூ.1,54,648 கோடி முதலீடு கிடைத்துள்ளது. மேலும் பெருநிறுவனங்கள் மூலம் மட்டும் 4,73,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு சிறு, குறு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015ம் ஆண்டு நடந்தது. இதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமை வகித்தார். அப்போது நடந்த அந்த மாநாட்டில் 2.4 இலட்சம் கோடி அளவிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.