Published on 27/01/2022 | Edited on 27/01/2022
திருச்சி பூலாங்குடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது தாயார் ஜானகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவர் உடல்நிலையைப் பரிசோதிக்க உறையூரில் உள்ள ஒரு தனியார் ஹோம் கேரை தொடர்பு கொண்டு செவிலியரை அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருச்சி பெரிய மிளகுபாறையைச் சேர்ந்த செவிலியர்கள் எழிலரசி(31), பூலான்குடி காலனி லட்சுமி(47) ஆகியோர் வந்து ஜானகியின் உடல் நிலையைப் பரிசோதித்துள்ளனர்.
அவர்கள் சென்ற பின்பு வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நெக்லஸ் காணாமல் போயிருந்தது. இதுதொடர்பாக நவல்பட்டு காவல் நிலையத்தில் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் செவிலியர் உதவியுடன் லட்சுமி நகையைத் திருடியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து லட்சுமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.