சில தினங்களுக்கு முன் பாஜக மாநிலச் செயலாளா் கே.டி. ராகவன், பெண் நிா்வாகி ஒருவருடன் பாலியல் இச்சையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரை ராஜினாமா செய்ய வைத்து பாஜகவினரையும் தலைகுனிய வைத்தது. வீடியோ வெளியிட்ட ஊடகவியலாளர் மதனும் அதற்கு துணையாக இருந்த ஒரு பெண்ணும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், குமாி மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பு ஒன்றின் மாவட்ட நிா்வாகியாக இருக்கும், குளச்சல் அருகே குளவிளை பிலாங்கரை காலணியைச் சோ்ந்த ராஜேஷ்வரன், அங்கு கோவில் ஒன்று நடத்திவருகிறாா். அவர், அந்தக் கோவிலுக்கு வரும் பெண்களின் தோஷம், நோய், குடும்ப கஷ்டத்தை தீா்ப்பதாக கூறி பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபடுவதாக செட்டியாா்மடத்தைச் சோ்ந்த ஜெகதீஸ்வாி என்ற பெண் மாவட்டக் காவல் கண்காணிப்பாளாிடம் புகாா் கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஜெகதீஸ்வாி கூறும்போது, “எனது கணவா் உடல்நலமின்றி இறந்துவிட்ட நிலையில், எனது மகனுக்கும் உடல்நிலை சாியில்லாமல் ஆனது. இதையடுத்து, ராஜேஷ்வரன் நடத்தும் கோவிலுக்குச் சென்றேன். கோவிலில் சில நாட்கள் தங்கும்படி என்னிடம் ராஜேஷ்வரன் கூறியதால் நானும் மகனும் கோவிலில் தங்கினோம். அப்போது ராஜேஷ்வரன் ஆசை வாா்த்தை கூறி என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதன்பிறகு தனியாக வீடு வாடகை எடுத்து என்னுடன் குடும்பம் நடத்திவந்தாா்.
இந்நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகம் வரவே அவருடைய செல்ஃபோனைப் பாிசோதனை செய்ததில், அவா் என்னைப் போல் கோவிலுக்கு வந்த 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்து, அதை செல்ஃபோனிலும் பதிவுசெய்து வைத்திருந்தாா். மேலும், அதைக் காட்டி அந்தப் பெண்களிடம் நகை மற்றும் பணத்தைப் பறிப்பதும் தொியவந்தது. இது சம்மந்தமாக இரணியல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தும், அவா் சாா்ந்திருக்கும் அமைப்பைக் காரணம் காட்டி போலீசாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளாிடம் புகாா் கொடுத்தேன்” என்றாா்.
இது சம்மந்தமாக நாம் ராஜேஷ்வரனிடம் கேட்டபோது, “அது எனது உறவுகார பெண்தான். அவள் சொல்வது எல்லாமே பொய். அவள் ஏதோ திட்டமிட்டுத்தான் என்மீது அவதூறு பரப்புகிறாா்” என முடித்துக்கொண்டாா். இந்த விவகாரம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,