Skip to main content

மாவட்ட ஆட்சியா் தற்போது மவுனம் காப்பது ஏன்? - திருச்சி பொதுமக்கள் கேள்வி (படங்கள்)

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள மாவடி குளம், தனிநபா்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் இந்தக் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு, குளத்தின் பரப்பளவான 142 ஏக்கரையும் சுத்தம் செய்ய நிதி ஒதுக்கி சுத்தம் செய்து பராமரிக்கபட்டது.

 

அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் பெய்த மழையால் அந்தக் குளம் நிரம்பியுள்ளது. இந்நிலையில் நிரம்பியுள்ள இந்தக் குளத்தில் அரசுக்கு வருமானத்தை தரக்கூடிய படகு சவாரி வைத்தால், திருச்சியில் சொல்லிக்கொள்ளும் அளவிலான சுற்றுலாத் தளங்கள் இல்லாததால், பொதுமக்கள் அதிகளவில் இந்த இடத்தில் படகு சவாரி செய்வதனால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். 

 

தற்போது இந்தக் குளத்தின் கரைகள், 2 கோடி ரூபாய் செலவில் பலப்படுத்தப்பட்டள்ளது. மேலும் குளத்தில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, இந்தக் குளத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், இந்த ஆகாயத் தாமரையின் வளா்ச்சியையும் கட்டுப்படுத்தலாம். எனவே மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியறுத்தி வருகின்றனா்.

 

ஆனால் மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மாவட்ட ஆட்சியா்தான் இங்கு படகு சவாரி விடலாம் என்று உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மவுனம் காப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

 

இந்த ஊரைச் சோ்ந்தவா்தானே சுற்றுலாத்துறை அமைச்சா். தன்னுடைய துறை சார்ந்து ஒரு வளா்ச்சி திட்டத்தை செய்தால் என்ன? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். இந்த ஊரில் ஒரு சுற்றுலாத்தளம் அமைந்தால் அது திருச்சி மாநகராட்சிக்கு வருமானத்தை ஈட்டித் தரும்.

 

எனவே தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக இந்தப் பணிகளைச் செய்தால் மட்டுமே முடியும். தோ்தல் அறிவித்துவிட்டால் எந்த வளா்ச்சி பணிகளையும் செய்ய முடியாது. மாவட்ட ஆட்சியரோ அல்லது சுற்றுலாத்துறை அமைச்சரோ இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக படகு சவாரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்