Firing over land dispute; Geriatric hospitalization

திருப்பத்தூர் அருகே நிலத்தகராறில் முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வழுதலம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சம்பத். இவர் தன்னுடைய சித்தப்பா உடன் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த முதியவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆறு இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

வழுதலம்பட்டு கிராமம் என்பது ஜவ்வாது மலையை ஒட்டியுள்ள கிராமம். மலைப்பகுதியை ஒட்டிய கிராமம் என்பதால் பலர் நாட்டு துப்பாக்கிகளை உரிமம் இல்லாமல் வேட்டையாடுதலுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்த பகுதியில் தொடர்ந்து சோதனையில் ஈடுபடும் பொழுது அவர்கள் நாட்டுத் துப்பாக்கி மறைத்து வைத்து விடுவது வழக்கமாக இருக்கிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் நாட்டுத் துப்பாக்கியால் நிலத்தகராறில் முதியவர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.