கடலூரில் ரூ.142 கோடி செலவில் நடைபெற்று வரும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த 2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட வெள்ள பாதித்த பகுதிகளான கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொதுப்பணித்துறைக்கு ரூ.140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. கடலூரில் 70 சதவீத பணிகளும், சிதம்பரம் பகுதிகளில் 65 சதவீத பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நவம்பர் 30 கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாக காப்பீட்டு தொகை செலுத்தினால் பயிர்கள் பாதிப்படையும் காலங்களில் காப்பீட்டு தொகை எளிதாக பெற முடியும்.
மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழகத்திற்கு 3400 கோடி ரூபாய் இழப்பீடு கிடைத்துள்ளது. மேலும் அதிகப் படியான பணிகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும். அதற்க்கான நிதியை அரசிடம் பெற உள்ளோம்" என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உட்பட பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.