Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழர்களின் பண்பாடும், வரலாறும், அடையாளமும் அழியும்; கலங்கும் போரட்டக்காரர்கள்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அழியப்போவது விவசாயமும், மீன் பிடி தொழிலும் மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும், கட்டிடக்கலைகளும், வரலாற்று ஆவணங்களும் சேர்த்தேதான் அழிக்கப்படும் என்று வேதனை கொள்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 When the hydrocarbon project comes, the culture, history, identity and identity of the Tamils ​​will be destroyed


ஹைட்ரோகார்பன் திட்டத்தை மூன்று மண்டலமாக பிரித்து அதனை எப்படியும் எடுத்துவிடுதற்கான வேலையை விரைவுபடுத்தி வருகிறது மத்தியஅரசு. விலைமதிப்பில்லாத ஹைட்ரோ கார்பனை எடுக்க 1992- 93 ஆண்டுகளிலேயே கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னோட்ட பணிகள் நடந்தது. அதனை ஓஎன்ஜிசி குருடாயில் எடுக்கிறது என்று மேலோட்டமாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரஷ்ய வல்லுனர்களின் துணையுடன் தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கடியில் இருக்கும் கனிமங்களை கண்டறிந்தது.

 

hydro carbon


அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பாகூர் முதல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரை 28,000 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரியும், 98 ஆயிரம் கோடி கன மீட்டர் அளவிற்கு எரிவாயுவும், 4 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஹைட்ரோ கார்பனும் இருப்பதாக அப்போதே கண்டுபிடித்த மத்திய அரசு அதை எடுக்கவே பல்வேறு முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக வரும்காலத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் திட்டத்தை செயல்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற தேவையில்லை என விதிகளை திருத்தி அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது.

 

hydro carbon


இதில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ள 55 மண்டலங்களில் வேதாந்தா குழுமத்திற்கு மட்டுமே 41 இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கெயில் நிறுவனத்திற்கு ஒன்று, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 9. ஹிந்துஸ்தான் எண்ணெய் ஆய்வு நிறுவனத்திற்கு 1 ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு 2. பாரத் எண்ணெய்வள நிறுவனத்திற்கு 1 என 55 மண்டலங்களை உருவாக்கி பிரித்துக்கொடுத்துவிட்டது.

தமிழகத்தில் மூன்று மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றினால் விவசாயம் மட்டுமின்றி வனப்பகுதிகள், நீர்நிலைகள், பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத் தலங்கள் என தமிழர்களின் பண்பாடும் சேர்ந்தே அழிந்தொழியும் நிலை ஏற்பட்டுவிடும். இதற்கு தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளித்து திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க வேண்டும் என திமுக, மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்புகள், என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

hydro carbon


மீத்தேன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில், அதன் ஒருங்கினைப்பாளர் பேரா,ஜெயராமன் தலைமையில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 16 பேர் மீது வழக்கும் பதிவாகியுள்ளது.

போராட்டத்தை முன்னெடுப்பவர்களோ, இது எங்களுக்கான பிரச்சனையில்லை, விவசாயிகள், மீனவர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டுக்கான பிரச்சனை உடனே திரண்டு வந்து திட்டத்தை முறியடிக்கவேண்டும்," என முழக்கமிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்