Skip to main content

தமிழகத்திற்குள் சாதி, மத சக்திகளை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்! - டிடிவி தினகரன்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
TTV


ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் தினசரி நோம்பு வைத்து வருகிறார்கள் நேற்று 27வது நோம்பு என்பதால் அதை முஸ்லீம் மக்கள் புனிதமாக கருதி புது துணி அணிந்து தொழுகை நடத்துவதும் வழக்கம். அப்படிப்பட்ட ரமலான் நோம்பில் நடைபெரும் இஃப்தார் விருந்தில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் திண்டுக்கல் வந்தார்.

டிடிவி தினகரன் சட்டமன்ற உறுப்பினராகி முதன் முதலில் திண்டுக்கல் வருவதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு மாவட்ட பொருப்பாளர்கள் பெரும்பாலானனோர் மாநகர் முழுவதும் டிடிவியை வரவேற்று நூற்றுக்கு மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

 

 

ஒரு முதல்வர் வந்தால் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அந்த அளவுக்கு இருந்தது அதை கண்டு டென்ஷனான ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பேனர்களையும், போஸ்டர்களையும் அகற்ற காக்கிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் காக்கிகளோ பிளக்ஸ் பேனர்களில் கைவைத்தால் பிரச்சினை வந்து விடும் என்பதால் போஸ்டர்களை மட்டும் ஆட்களை வைத்து கிழிக்க சொல்லியும் வந்தனர். அப்படி இருந்தும் கூட பெரும்பாலான போஸ்டர்களை கிழிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் மாலையில் இஃப்தார் விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த டிடிவிக்கு நகர் முழுவதும் ஆதரவாளர்கள் அங்கங்கே நின்று மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்ததால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதோடு டிடிவிக்கு கொடுத்த வரவேற்பை கண்டு ஆளும் கட்சியினரே அரண்டு போய் விட்டனர். அந்த அளவுக்கு ஆதரவாளர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு பேகம்பூர் சாத்தங்குடி நாடார் திருமணம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு அங்கு இருந்த நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் மக்களோடு உட்கார்ந்து இஃப்தார் விருந்தான நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி குடித்தார்.
  TTV


அதன் பின் அந்த முஸ்லீம் மக்கள் மற்றும் கட்சிகாரர்கள் மத்தியில் பேசிய டிடிவி தினகரனோ...

ரமலான் நோம்பை முன்னிட்டு நேற்று முத்துப்பேட்டை தர்க்காவில் கலந்து கொண்டேன். வாக்கு வங்கியை மனதில் வைத்து கொண்டு தங்களை சந்திப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால் முஸ்லிம் சகோதர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும். இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி தலைவர் எம்ஜிஆர், அண்ணா, பெரியார் வழியில் சின்னம்மா தலைமையில் இயங்கி வருகிறது. அப்படிப்பட்ட இந்த இயக்கம் எப்பொழுதும் சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

இந்த 27வது நோன்பு முஸ்லீம் மக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். இந்த நாளில் நான் திண்டுக்கல்லில் கலந்து கொண்டது பெருமையாக நினைக்கிறேன். அதுபோல் தமிழகத்திற்குள் சாதி, மத சக்திகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று பேசினார். அதைதொடர்ந்து இந்த இஃப்தார் விழாவில் கலந்து கொண்ட முஸ்லீம் மக்களுக்கு நல திட்ட உதவிகளையும் வழங்கி விட்டு சென்றார். திண்டுக்கல்லில் அரசியல் கட்சிகள் நடத்திய இஃப்தார் விருந்துகளில் டிடிவி ஆதரவாளர்கள் நடத்திய ரமலான் இஃப்தார் விருந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சார்ந்த செய்திகள்