Published on 06/01/2019 | Edited on 06/01/2019

இன்று செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதற்காக தேர்வு செய்து வருகிறோம். இடைத்தேர்தல் தள்ளிப்போகும் என்பது அனைத்துக்கட்சி சார்பிலான ஒரு எதிர்பார்ப்பு. திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக ஒரு பொருட்டே கிடையாது. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டியே தவிர அமமுக எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என கூறினார்.