வயதான மூத்த குடிமக்களுக்கு மரியாதை கொடுப்பது மனித வாழ்வியலில் அரிதாக போய்விட்டது. இந்த நிலையில் ஈரோடு அரசு மழலையர் பள்ளியில் வித்தியாசமாக உலக மூத்த குடிமக்கள் தின விழா கொண்டாடப்பட்டது. தாத்தா - பாட்டிகளுக்கு குழந்தைகள் பரிசு வழங்கி அசத்தினார்கள்.
உலக மூத்த குடிமக்கள் தினம் சென்ற 21ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டியே ஈரோடு அரசு மழலையர் பள்ளியில் உலக மூத்த குடிமக்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை தாங்கினார். எல்கேஜி யூகேஜி படிக்கும் மாணவ மாணவிகள் தங்களது தாத்தா, பாட்டியையும் இன்று உடன் அழைத்து வந்திருந்தனர். தாத்தா பாட்டிகள் தங்களது பேரன் பேத்திகளுக்கு தலையில் மலர் தூவி வாழ்த்தினார்கள். இதேபோன்று பேரன் பேத்திகளும் தங்களது பாட்டி தாத்தா களுக்கு பரிசு வழங்கினார்.
குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். குடும்ப உறவு முறைகள் குறித்தும் ஆசிரியர்கள் விளக்கமாக குழந்தைகளுக்கு கூறினார்கள்.
இந்த அரிய நிகழ்வு வயதானவர்களை நெகிழ்ச செய்தது.