திருச்சி என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பாணை கடந்த ஜனவரி மாதம் 30 தேதி வெளியிட்டார். பல்வேறு துறைகளில் உள்ள 134 பணியிடங்கள் நிரப்புவதற்காகத் தான் இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் தாழ்த்தப்பட்டடோர், பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர். பெண்கள், மாற்றுதிறனாளிகள், என ஒவ்வொரு பிரிவுக்கும் எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து குறிப்பிடப்படும். ஆனால் என்.ஐ.டி. நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் உதவி பேராசிரியர் நிரப்புவதற்காக எந்த ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் இல்லை.
எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறார்கள் என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இது பொதுவாக விண்ணப்பம் செய்பவர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நிர்வாகத்திற்கு விண்ணப்பதாரர்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அதிர்ச்சியான மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என்றும், மேலும் இடஒதுக்கீடு அடிப்படையில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விவரங்களுடன் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் விசாரித்து திருச்சி என்.ஐ.டி. கல்லூரி உதவி போராசிரியர் அறிவிப்பாணைக்கு தடைவித்தனர். மேலும் இது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை செயலர், திருச்சி என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.