விழுப்புரம் மாவட்டம் சாலவனூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் பணியாளர்கள் வேலை செய்யும் போது நாய் ஒன்று நிலத்தை பிராண்டியதில் இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து கஞ்சனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் யார் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் அருகில் உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போனது தெரிய வந்தது. அவர்தான் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் சடலம் என்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அரியலூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்துள்ளனர் சிறுமியின் பெற்றோர்.
சிறுமி பாட்டி வீட்டில் இருப்பதாக பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். போலீஸ் விசாரணை செய்ததில் சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது அகிலன், அவரது நண்பர் பழைய கருவாச்சியை சேர்ந்த அருண் இருவரும் சேர்ந்து கொலை செய்ததும், இதற்கு உடந்தையாக கக்கனூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்ற இளைஞர் உடலை புதைப்பதற்கு மண்வெட்டி கொண்டு வந்து கொடுத்துள்ளார். மூவரும் சேர்ந்து சுடுகாடு அருகே குழி தோண்டி சிறுமியின் உடலை புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டு. சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சித்தேரிப்பட்டு அகிலன் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அகிலன் பேண்ட் வாத்திய இசைக் குழுவில் மேளம் வாசிக்கும் பணியை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் கண்டமானடி கிராமத்தில் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு பேண்ட் வாத்தியம் இசைக்க குழுவில் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். செல்போன் மூலம் சில ஆண்டுகளாக காதலை வளர்த்தனர். சிறுமியும் அகிலனும் அவ்வப்போது தனிமையில் பல்வேறு இடங்களுக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். காதலின் நெருக்கம் அதிகரித்ததன் காரணமாக சிறுமி கர்ப்பமானார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் அகிலனிடம் வற்புறுத்தி வந்துள்ளார் சிறுமி. திருமணம் செய்ய மறுத்தால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி விடுவேன் என்று மாணவி மிரட்டியுள்ளார். இதன் பிறகு மாணவியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு வருமாறு வரவழைத்த அகிலன் அந்த சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார். சம்பவத்தன்று வி. அரியலூர் பகுதியில் சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் அகிலனிடம் வற்புறுத்தி உள்ளார் அதற்கு அகிலன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது தனது நண்பன் அருணையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார் அகிலன் கோபத்துடன் மாணவியை தாக்கியுள்ளார். இதனால் மாணவி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அகிலனின் நண்பன் அருண் மாணவியின் கழுத்தில் அவர் அணிந்து இருந்த துப்பட்டாவை போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். உயிரிழந்த சிறுமியை உடலை என்ன செய்வது என்று இருவரும் யோசித்தனர். பிறகு அகிலன் கக்கனூரைச் சேர்ந்த நண்பன் சுரேஷ் குமார் என்பவரை மண்வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளார் அதன்படி சுரேஷ் குமார் மண்வெட்டி எடுத்து வந்து கொடுக்க மூவரும் சேர்ந்து மாணவியின் உடலை இருசக்கர வாகனத்தில் சாலவனூர் சுடுகாட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டனர்.
சிறுமியின் பெற்றோர் சிறுமி பாட்டி வீட்டில் இருப்பதாக கருதி வந்தனர் அவரது பாட்டியோ அப்பா அம்மாவுடன் சிறுமி கடமாநடையில் இருப்பதாக கருதிக் கொண்டிருந்துள்ளார். தற்போது மாணவி காணாமல் போனது அதன் பேரில் போலீசாரின் விசாரணையில் கொலையாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.