Skip to main content

ஏரியை தூர்வாரும் கிராம இளைஞர்கள்...

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

 

பெரம்பலூர் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஒட்டியுள்ளது இருர்கிராம். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிரதானமாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது அந்த ஏரியில் சீமை கருவேலமரங்கள் காட்டுச் செடிகள், வளர்ந்து மண்டிக் கிடந்தன. இந்த ஏரியை சுத்தம் செய்து தூர்வாரி கரையை செப்பனிட்டு மழைக்காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் அதை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால், பல ஆண்டுகளாக சரியான மழை இல்லாததாலும் அரைகுறையாக பெய்யும் மழைநீரை ஏரிக்கு கொண்டு வரும் வரத்து வாய்க்கால்கள் சீர்கெட்டு கிடதுள்ளது. 

 

இந்த அவல நிலையை பார்த்து ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஏரியை சுத்தப்படுத்த தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட ஆட்சியர் முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரை பல்வேறு அதிகாரிகளுக்கு சீர் செய்து கொடுக்குமாறு மனு அளித்து வந்துள்ளனர். இவர்களது மனுவை அரசும் கண்டு கொள்ளவில்லை அதிகாரிகளும் ஏறெடுத்து பார்க்கவில்லை. 

 

இனிமேல் அரசாங்கத்தை நம்பி பயனில்லை ஒன்றும் நடக்காது என முடிவு செய்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த நிதியை கொடுத்தனர். அதோடு ஊர் மக்களிடமும் அவர்களால் இயன்ற அளவு பண உதவி செய்து தருமாறு கேட்டுள்ளனர். அப்படி கிடைத்த பணத்தை கொண்டு இவர்களே ஏரி செப்பனிடும் பணியை துவக்கியுள்ளனர். இது குறித்து இளைஞர்கள் மணி, அறிவழகன் ஆகியோர் கூறும்போது, இந்த ஏரியில் நீர்ப்பிடிப்பு ஏற்படுத்தினால் பெங்களூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் விவசாய குடும்பங்கள் பயன்  பெறுவார்கள். இதன் மூலம் உணவு உற்பத்தி பெருகும் மேலும் ஏரியில் தண்ணீர் இல்லாததால் அருகில் உள்ள ஆழ்குழாய் போர்கள் பாசனக் கிணறுகளில் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.

 

அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக அரசு உதவியை எதிர்பார்த்து கிடைக்காததால் பொதுமக்கள் இளைஞர்கள் முயற்சியினால் ஏரி செப்பனிடும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பணியை முழுமையாக செய்து முடித்த பின் மழை பெய்யும்போது, ஏரியில் தண்ணீர் தேங்கும். அதன்மூலம் விவசாயம் நடைபெறும். நீர் பெருகும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறோம் என்கிறார்கள் இளைஞர்கள் இருவரும். இளைஞர்களின் முயற்சியை கண்டு அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.