வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் முக்கிய பகுதியில் இந்தியா நம்பர் 1 என்கிற நிறுவனத்தின் ஏ.டி.எம் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏ.டி.எஸ் இயந்திரம் உள்ள அறைக்குள் சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா வை ஸ்பீரே கொண்டு பேஸ்ட் அடித்துவிட்டு ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
அதேபோல், தெக்குபட்டு என்கிற கிராமப்பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மிலும் இரவு மர்ம நபர்கள் புகுந்து, சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்து மறைத்துவிட்டு ஏ.டி.எம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளயைடித்து சென்றுள்ளனர்.
அக்டோபர் 26ந்தேதி காலை பணம் எடுக்கச்சொன்ற வாடிக்கையாளர் ஒருவர் இதனை பார்த்துவிட்டு தகவல் சொல்ல அம்பலூர் போலிஸார் இரண்டு இடங்களுக்கும் சென்று விசாரணையை நடத்தி வருகின்றனர். பணத்தை கொள்ளையடித்தவர்கள், மோப்பநாய் கண்டுபிடித்துவிடக்கூடாது என மிளகாய்பொடி தூவிவிட்டு சென்றுள்ளனர்.
அந்த இரண்டு இயந்திரங்களுக்குள் எவ்வளவு பணம் வைக்கப்பட்டது, அதில் கொள்ளைப்போனது எவ்வளவு தொகையென வங்கி அதிகாரிகளிடமும் போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பண்டிகை காலங்களில் கடைவீதிக்கு செல்லும்போது, பர்ஸ் பத்திரம், பாக்கெட் பத்திரம், தங்கநகைகள் பத்திரம் என எச்சரிப்பார்கள். காரணம், திருடர்கள் விழாக்காலங்களை பயன்படுத்திக்கொண்டு திருடுவார்கள். அதுப்போல் பண்டிகை, திருவிழா காலங்களில் ஏ.டி.எம் இயந்திரங்களும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் போல.