முன்னாள் சென்னை காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லாவிடம் கடந்த மே 8ம் தேதி விசாரணை நடந்துள்ளது.
இவர் 2016ம் ஆண்டில் சென்னை காவல் ஆணையராக இருந்தவர், குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றதாக மாதவராவின் டைரியில் இருந்தது. அதனடிப்படையிலேயே விசாரணை நடந்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை சம்மன் அனுப்பியபோது அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஜரானார்.
குட்கா மீதான விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட, அதில் தொடர்புடைய பலரையும் விசாரித்தது சிபிஐ. குட்கா தடைக்குபிறகு அதிகமாக விற்கப்பட்ட காலமான 2016ல் சென்னை காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதாலும், மாதவராவ்வின் டைரியில் பெயர் இருந்தது என்பதாலும்தான் இவரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இன்னும் சில மாதங்களில் சிபிஐ விசாரணை முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.