Skip to main content

ஓட ஓட விரட்டி ஆட்டோ பைனான்சியர் வெட்டி படுகொலை; வேலூரில் பரபரப்பு!

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
vellore Auto financiers incident

வேலூர் சேண்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே வாலிபர் ஒருவர் வெட்டு காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக வேலூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வேலூர் வடக்கு காவல் துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், படுகொலை கொலை செய்யப்பட்ட நபர் சத்துவாச்சாரி செங்காநத்தம் சாலை மகாவீர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ பைனான்சியர் செந்தில்குமார்(39) எனத் தெரியவந்துள்ளது. இவர் வேலூர் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பைனான்ஸ் நடத்தி வந்ததாக தெரிகிறது.

மேலும், செந்தில்குமாரை பட்டப்பகலில் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில் செந்தில்குமார் தனது ஸ்கூட்டி பெப் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்ப முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை அங்கேயே வெட்டி சாய்த்து உள்ளது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து செந்தில்குமார் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் மோப்பநாய் சாரவை கொண்டும், தடயவியல் நிபுணர்களைக் கொண்டும் கொலையாளிகளை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் தேடி வருகிறனர்.

சார்ந்த செய்திகள்