Skip to main content

சென்னையிலிருந்து 520 கிலோ மீட்டரில் 'நிவர்' புயல்! - ரயில் சேவைகள் ரத்து!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

 'Nigar' storm-train service canceled

 

வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உருவாகியுள்ள, 'நிவர்' புயல் தற்பொழுது சென்னையில் இருந்து 520 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 500 கிலோமீட்டர் தூரத்திலும் நிலைகொண்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் நாளை மறுநாள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மயிலாடுதுறை-தஞ்சை மார்க்கத்தில் இயங்கவிருந்த 6 ரயில்கள், 24 மற்றும் 25-ஆம் தேதியன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தஞ்சை செல்லும் உழவன் விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலிருந்து திருச்சி செல்லவிருக்கும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு சுமார் 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து புயலாகவும், நாளை தீவிரப் புயலாகவும் மாறி வடமேற்குத் திசையில் நகர்ந்து, தற்போதைய நிலவரப்படி, வரும் 25 ஆம் தேதி பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்தில் 26 -ஆம் தேதி வரை, மழை நீடிக்கும். அதேபோல் புயல் கரையைக் கடக்கும் பொழுது 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்