Skip to main content

அமமுக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

வேலூர் மாவட்டம் அமமுக கட்சியை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன், தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திமுகவில் இணைய இணைந்தார். அதே போல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அமமுகவின் மாவட்ட நிர்வாகியான பாண்டுரங்கனும், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

VELLORE AMMK LEADER JOIN WITH DMK PARTY FOR TODAY

 

 

தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன். இவர் ஏற்கனவே அதிமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளில் இருந்தவர்.  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்