Published on 17/01/2019 | Edited on 17/01/2019

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும்,நேற்று மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து இன்று தற்போது தொடங்கி நடைபெற்று வரும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1400 காளைகள் மற்றும் 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் கார்,கட்டில் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன,
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.