நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபயணம் தொடங்கவிருந்த நிலையில், கூட்டத்தில் சிவகாசியை சேர்ந்த ரவி என்ற மதிமுக தொண்டர் திடீரென தீக்குளித்தார்.
இதையடுத்து தீக்குளித்த ரவியை மதிமுக தொண்டர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொண்டர் தீக்குளித்ததை நேரில் பார்த்த வைகோ மேடையில் கண்ணீர் வீட்டார். தீக்குளித்த தொண்டரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற எத்தனையோ பேர் தீக்குளித்ததை என்னால் தாங்க முடியவில்லை. இயற்கை அன்னை எப்படியாவது தீக்குளித்த தொண்டரை காப்பாற்றித் தர வேண்டும் என மேடையில் கண்ணீருடன் பேசினார்.