தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவல்ன்னு மத்திய உளவுத்துறை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரித்த போது, பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி இலியாஸ் அன்வர் என்பவர் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைச் சீர்குலைக்க முயல்வதாகவும், அவர்களை மடக்க, என்.ஐ.ஏ. டீம், தமிழகம் முழுதையும் சலிப்பதாகவும் காவல்துறை மூலம் தகவல் பரப்பப்பட்டிருக்கு. இந்தியாவுக்குள் 6 பேர் ஊடுருவப் போகிறோம்னு அவர்கள் பட்டியல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் எழ, இதுகுறித்து நாம் காவல்துறை தரப்பிலேயே விசாரித்தோம்.
நம்மிடம் சிரித்தபடியே பேசிய அந்த அதிகாரி, "இப்ப காங்கிரஸின் சீனியர் தலைவரான ப.சி.யைக் கைது செய்ததால், தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கு. மத்திய அரசுக்கு எதிரான விமர்சனமும் அதிக அளவில் எழுந்திருக்கு. அதனால், தமிழக மக்களின் ப.சி. விவகாரத்தின் மீதான கவனத்தைத் திசை திருப்பணுமே, அதனால்தான் தீவிரவாதிகள் இங்கே நுழைந்திருக்கிறார்கள்'னு சிரித்தார். ஊடுருவல் பற்றி கணக்குக்காட்ட சிலர் கைதாவார்கள். பிறகு அவர்கள் பாடு.. நீதிமன்றத்தின் பாடுன்னும் அவரே சொல்றார். இருந்தாலும் மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் காவல் துறையும் மற்ற பாதுகாப்பு துறையும் எச்சரிக்கையாக கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.