Skip to main content

காணக்கிடைக்காத தும்பி வகை மீன்... ராமநாதபுரத்தில் மீனவர் வலையில் சிக்கியது!

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

காண அரிதான தும்பி வகை மீன் ராமநாதபுரத்தில் மீனவர் வலையில் சிக்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

An unseen dumbi fish caught in a fisherman's net in Ramanathapuram!


உலகில் வேறெங்கும் கிடைக்காத அரிய வகை மீனாக இந்த தும்பி வகை மீன் கருதப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இதுபோன்ற பல காண அரிதான கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிங்ஸ்டன் என்ற மீனவர் நேற்று வழக்கமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது வலையில் தும்பி  என்ற வகையைச் சேர்ந்த மீன் எதிர்பாராதவிதமாக அவரது வலையில் சிக்கியது.

 

An unseen dumbi fish caught in a fisherman's net in Ramanathapuram!

 

பல வண்ணங்களில் காட்சியளித்த அந்த மீன் கொடிய விஷத்தன்மை கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அது உண்ண ஏற்ற மீன்கள் அல்ல எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த மீனை மீண்டும் கடலிலேயே மீனவர் கிங்ஸ்டன் விட்டுவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்