
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று (30.03.2025) மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது.
அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்களைஎடுத்தார். அடுத்ததாக ரியான் பராக் 28 ப்ந்துகளில் 37 ரன்களை எடுத்தார். சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்களை எடுதார். இவ்வாறாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதன் மூலம் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. இருப்பினும் சென்னை அணி இறுதியாக 20 இவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராய் கெய்வாட் 44 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். ரவிந்தர ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். மேலும் ராகுல் திரிபாதி 19 பந்துகளில் 23 ரன்களையும் எடுத்தார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களம் களம் கண்ட டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 என்ற இலக்கை 16 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.