Skip to main content

’என் பொண்ணே என்கிட்ட நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்கன்னு கேக்குறா’ -குமுறிய டிடிவி தினகரன்

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

 

தேர்தல் தோல்வி ஏன் என ஆராய்வதற்காக,  குறைகள் தீர்க்கும் குமாரவயலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ஹோட்டல் சங்கத்திலிருந்து பத்து முப்பது மணிக்கு மேல் கிளம்பினார். புத்தூர் நால் ரோட்டில் இருந்து குமாரவயலூர் வரை வரவேற்புப் பதாகைகளும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. வட்டக் கழகம் சார்பாக முளைப்பாரி ஏந்தி வழியில் வரவேற்பளிக்கப்பட்டது. குமாரவயலூர் அருள்மிகு முருகன் திருக்கோவில் பிரசாதம் வழங்கப்பட்டு வெள்ளி வேல் வழங்கப்பட்டது

 

t

 

அல்லித் துறையில் நால்ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மண்டபத்திற்கு 11.45 மணிக்கு டிடிவி வந்தார். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு மாநகர மாவட்ட நிர்வாகிகள் மட்டும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.    மேடையில் மாநகர செயலாளர்கள், அணிச் செயலாளர்கள் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டனர். பலருக்கு அடையாள அட்டை வழங்காத காரணத்தினால் மண்டபத்தின் வெளியே இருந்தனர்.

 

t

 

திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பேசுகையில்,  ஆந்திரா ஜெகன்மோகன் ரெட்டி போன்று நடைபயணம் தமிழகம் முழுவதும் போக வேண்டும் என்றார். 

 

மாநகர செயலாளர் சீனிவாசன் பேசுகையில், ஒரு ஓட்டு போட்டால் 9 ஓட்டு அவர்களுக்கு விழுவது போல் ஓட்டு மிஷினில் மாற்றியிருக்கிறார்கள்  என்றார்.


 

இறுதியாக  டிடிவி தினகரன் பேசுகையில்,  மதிப்புமிக்க மாவட்டம் திருச்சி.  இங்கு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.  மே 23 முடிவு எல்லாரையும் போல் வெற்றி கிடைக்காதது வருத்தம் தான்.  தோல்விக்கு காரணம் தெரிந்த பின் அடுத்த வேலையை துவங்கி விட்டேன். 
 

நிர்வாகிகள் துரோகம் செய்து இருந்தால் வருத்தம் இருக்கும்.  ஆனால் அனைவரும் வேட்பாளருடன் குடும்பம் போல் பணியாற்றினார்கள். பேரறிஞர் அண்ணா,  எம்ஜிஆர் போன்றோர் கட்சி ஆரம்பிக்கும் போது பலர் வெளியேறி உள்ளார்கள். அதுபோல சில சுயநல நிர்வாகிகள் எப்போது வேண்டுமானாலும் விலகுவர். புரட்சித்தலைவருக்கும்,  அம்மா அவர்களுக்குமே துரோகம் இழைத்தவர்கள் உண்டு.

 
இயக்கத்திலிருந்து மேல்மட்ட தலைவர்கள் சுயநலத்தில் மாறலாம். அடிமட்ட தொண்டர்கள் ஒருநாளும் மாறமாட்டார்கள். சிலர் குழப்பி குழப்பி பேசுகிறார்கள். அவர்கள் குழம்பிப்போய் மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

 

t


இரட்டை இலை மற்றும் அதிமுகவை   நிச்சயமாக மீட்டெடுப்போம். அதன் ஜனநாயக ஆயுதம்தான்  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் . நான் வீட்டில் இருந்த நாட்களை விட தொண்டர்களுடன் இருந்த நாட்கள் தான் அதிகம். இரண்டு வருஷம் வேனில் தான் அதிகமாக இருந்துள்ளேன். அனைத்து மக்களுடன் மக்களாக பேசிக்கொண்டிருக்கின்றேன். பல வாக்குச்சாவடிகளில் நமக்கு பூஜ்யம்.   வாக்குப்பதிவு எப்படி சாத்தியமாக முடியும்.  நமது வாக்கு எங்கே போனது, யாருக்கு போனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. பரிசு பெட்டி போல் சில சின்னங்கள் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.  நமக்கு சின்னம் உடனே கிடைத்து விடவில்லை.  தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை.  உச்ச நீதிமன்றத்தில் 40 சுயேச்சை வேட்பாளர்களாக கூறினார்கள்.  பின்பு பொதுவாக ஒரு சின்னம் கிடைத்தது. அதுதான் பரிசு பெட்டி.

 

பெரம்பலூர் தொகுதியில் 11 பூத்தில் பூஜ்ஜியம்.  லால்குடியில் ஒரு பூத்திலும்,   மணச்சநல்லூரில் ஒரு பூத்திலும்,  முசிறி 4 பூத்திலும்,  துறையூர் ஒரு பூத்திலும் பூஜ்ஜியம் வாக்கு கிடைத்துள்ளது. நான் வசிக்கும் இடத்தில் கூட 14 வாக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது.  எனது பெண் நீங்க எல்லாம் யாருக்கு ஓட்டு போட்டீங்கனு கேக்குறாங்க.
 

நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஆனால் அளித்த வாக்கு எங்கு போனது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே கட்சி என கொண்டு வந்து விடுவார்கள்.
 

அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையை தான் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. இங்கு கூடி இருக்கின்ற கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டமா காலையிலிருந்து இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தல் வைக்க மாட்டார்கள்.   தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. எனக்கு 55வயது ஆகிறது.  இன்னும் இருபது வருடங்கள் உழைக்கும் அளவுக்கு மனவலிமையும்  உடல் வலிமையும் என்னிடம் உள்ளது.  என்று உருக்கமாக பேசி தடுமாற்றத்தில் இருந்த கட்சி தொண்டர்களுக்கு மனதைரியத்தையும் நம்பிக்கையும் ஊட்டும் விதமாக பேசி   உற்சாகமாக பேசி வருங்காலம் வளமான காலமாக அமையும் என்று பேசி முடித்தார். 


 

சார்ந்த செய்திகள்