![Two women smuggled gold in leggings](http://image.nakkheeran.in/cdn/farfuture/k11WwrGKudkbn4MlE_Yfpye789KIEBOUNyAq-UXSdjo/1669377807/sites/default/files/inline-images/996_61.jpg)
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்ததால் அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பெண் அணிந்து வந்த லெகின்ஸ் பேண்டில் 105 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கமும் , 30 கிராம் எடையுள்ள தங்க செயினும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த பெண்ணிடம் மொத்தமாக 135 கிராம் எடையுள்ள 7,07,895 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் மற்றொரு பெண் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பெண் அணிந்து வந்த உள்ளாடையில் 57 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கமும், 30 கிராம் எடையுள்ள தங்க செயினும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து, மொத்தம் 87 கிராம் எடையுள்ள 4 லட்சத்து 51 ஆயிரத்து 911 ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து இரண்டு பெண் பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.